×

மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை: குற்றாலத்தில் விடிய விடிய சாரலால் வெள்ளப்பெருக்கு

தென்காசி: குற்றாலத்தில் விடிய விடிய பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.கேரளாவில் இம்மாதம் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு தினங்கள் அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், கடந்த 2 தினங்களாக குற்றாலம் பகுதிகளில் சாரல் பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் சாரல் தொடர்ந்து காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் ஆக்ரோஷமாக விழுந்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் மெயினருவியில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தன…

The post மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை: குற்றாலத்தில் விடிய விடிய சாரலால் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Mainaruvi ,Tengkasi ,Kullalam ,
× RELATED குளிக்க தடைவிதிப்பு